அருணாசல புராணம்

This work dealt with fame of Lord Siva of Thiruvannamalai alis Asalam in Sanskrit. This work is written in two parts with twelve chapters on the basis of Sanskrit books Siva purana in the first part in 451 stanzas and Linga purana in second part in 137 stanzas. Leaf Nos. 2, 6, 14, 20, 21, 24, 25, 30, 31, 33, 35, 36, 38-40, 44-46, 49, 50, 56, 57, 60, 68, 71, 74, 75, 77, 78 are missing. அண்ணல் மலையாகிய திருவண்ணாமலையை அருணன் அசலம் எனக் கொண்டு பிற்காலத்தில் வடமொழியாளர் பெய சூட்டினர். அண்ணாமலை அண்ணலாகிய சிவபெருமானின் புகழைப் போற்றுவது இந்நூல். இது இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தை வடமொழிச் சிவபுராணத்திலுள்ள ருத்திர சங்கிதையிலிருந்தும், இரண்டாம் பாகத்தை லிங்கபுராணத்திலிருந்தும் கருத்துக்களை எடுத்துக் கொண்டு பாடப்பெற்றுள்ளது. பாயிரம் நீங்கலாக முதல்பாகம் 451 பாடல்களில் திருநகர்ச் சருக்கம், திருமலைச் சருக்கம், திருவவதாரச் சருக்கம், திருக்கண் புதைத்த சருக்கம், பார்வதி இடப்பாகம் பெற்ற சருக்கம், வச்சிராங்கத பாண்டியச் சருக்கம் என ஆறு சருக்ககங்களும், இரண்டாம் பாகம் 137 பாடல்களில் தீர்த்தச் சருக்கம், திருமலை வலம்புரிச் சருக்கம், ஆதித்தச் சருக்கம், பிரதத்தராசன் சருக்கம், பாவம் தீர்த்த சருக்கம், புளகாதிபச் சருக்கம் என ஆறு சருக்கங்களும் எனப் பன்னிரண்டு சருக்கங்கள் கொண்டது. ஏட்டெண் 2, 6, 14, 20, 21, 24, 25, 30, 31, 33, 35, 36, 38-40, 44-46, 49, 50, 56, 57, 60, 68, 71, 74, 75, 77, 78 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 51. Size and dimensions of original material: 22.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Saiva Ellappa Navalar. Original institution reference: TU_TAMIL_1551_1936.