This Manuscript dealt with the Vedanta and Saiva philosophical thoughts such as formation of world, God and other creature. It was the upadesa of Nandeeswara to Thirumoolar. Manuscript starts from the leave no. 82 and leave nos 88, 90, 96,100 are not available. பராபரமாகிய பரமேஸ்வரன் தராதலம் படைக்கத் தான் நினைந்தருளி, பராபரத்திற் பரம் தோன்றி, பரத்திற் சிவம் தோன்றி, சிவத்திற் சக்தி தோன்றி, சக்தியில் நாதம், நாதத்தில் விந்து, விந்துவில் சதாசிவம், சதாசிவத்தில் மகேஸ்வரன், மகேஸ்வரனில் ருத்ரன், ருத்ரனில் விஷ்ணு, விஷ்ணுவில் பிரம்மா, பிரம்மாவில் ஆகாசம், ஆகாசத்தில் வாயு, வாயுவில் அக்னி, அக்னியில் அப்பு, அப்புவில் பிரித்தி, பிரித்வியில் அன்னம், அன்னத்தில் நரமிருகம் பட்சிகள், தாவர சங்கமங்கள் தோற்றம் பெற்றது என்றும், இவையாவும் அன்னத்தில் பிரித்வி ஒடுங்கி, பிரித்வியில் அப்பு ஒடுங்கி என்கிற பின் வைப்பு முறையில் ஒடுக்கம் பெறுகிறது என்பதைக் கூறுவது. இவை யாவற்றுக்கம் மூலாதாரம் பரப்பிரம்மம் என்பதை விளக்குவது இந்நூல். 82ஆம் ஏட்டெண்ணில் நூல் தொடங்குகிறது. 88, 90, 96, 99, 100 ஆகிய ஏடுகள் இல்லை. ஆதிவள்ளுவ நாயனார் கபிலமகரிஷி சாட்சியாக திருநந்தீஸ்வரர் திருமூலதேவருக்கு அருளிச்செய்த தோற்ற ஒடுக்கம். Extent: 19. Size and dimensions of original material: 12.4cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Nantheesar. Original institution reference: TU_TAMIL_0038-02_0042.
