இலக்கண விளக்கம் - அணியியல் மூலமும் உரையும்

This work Ellakkana vilakkam (explanation of Grammer) gives details of five grametical works. It is also metioned as abridged version of Tholkappiyam. It has major three divistiosns as Ezhuthu, Porul and Cheyul. All the three has five chapters. First division Ezhuthu has 158 stanzas, Solathikaram has 214 stanzas and Porul has 569 stanzas. This manuscripts has only aniyiyal of Porul division. இலக்கண விளக்கம்  ஐந்திலக்கணங்களையும் பாட்டியலையும் விளக்குகிறது. இந்நூலைக் குட்டித் தொல்காப்பியம் என்றும் குறிப்பிடுவதுண்டு. இந்நூலில் உள்ள பல பாடல்கள்  நன்னூல்  முதலிய பழைய நூல்களில் இருந்து அப்படியே எடுத்தாளப்பட்டவை. இவ்வாறான பாடல்களுடன் தானியற்றிய பாடல்களையும் சேர்த்து ஒரு தொகுப்பு நூல் போல இதனை ஆக்கியுள்ளார் நூலாசிரியர். இந்நூலில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்கள் உள்ளன. எழுத்ததிகாரத்தில், எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபுப் புணரியல் என ஐந்து இயல்களும் சொல்லதிகாரத்தில் பெயரியல், வினையியல், உரிச்சொல்லியல், இடைச்சொல்லியல், பொதுவியல் என்னும் ஐந்து இயல்களும் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், அணியியல், செய்யுளியல், பாட்டியல் என்னும் ஐந்து இயல்களும் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரத்தில் 158 பாடல்களும், சொல்லதிகாரத்தில் 214 பாடல்களும், பொருளதிகாரத்தில் 569 பாடல்களுமாக நூலில் மொத்தம் 941 பாடல்கள் உள்ளன. இச்சுவடி பொருளதிகாரத்தில் உள்ள அணியியல் மூலமும் உரையுமாக அமைந்துள்ளது. ஏட்டெண் 183 முதல் 244 வரை உள்ள ஏடுகள் உள்ளன. ஏட்டெண் 216 வேறுபட்ட கையெழுத்தாக உள்ளது. Extent: 62. Size and dimensions of original material: 28.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thiruvarur Vaidyanatha Desigar. Original institution reference: TU_TAMIL_0244_0388.