வில்லி பாரதம் : 18ஆம் போர்ச் சருக்கம் மூலமும் உரையும்

This work Villi Bharatam of Villiputhur Azhvar is written on the bases of the Vyasa Bharatam. It has ten parvas such as Adhi parva, Saba parva, Aranya parva, Virada parva, Uddhiyoga parva, Veetuma parva, Duraona parva, kanna parva, salliya parva and sowpthika parva in 4337 stanzas. This manuscript has the eighteenth day war details only. This is the last day of the war between Pandavas and Gauruvas. In this war 99 gauruvas killed except Duriyothana. It explains the mental state of Duriyothana. வில்லிபாரதம், வடமொழியில் வியாசரால் பாடப்பெற்ற வியாச பாரத்தை அடிப்படையாகக் கொண்டு வில்லிபுத்தூர் ஆழ்வாரால் பாடப்பெற்றது. ஆதி பருவம், சபா பருவம், ஆரணிய பருவம், விராட பருவம், உத்தியோக பருவம், வீட்டும பருவம், துரோண பருவம், கன்ன பருவம், சல்லிய பருவம், சௌப்திக பருவம் எனப் பத்துப் பருவங்களில் 4337 பாடல்களால் ஆனது இந்நூல். வில்லிபாரதத்தில் 18ஆம் போர்ச்சருக்கம் உரையுடன் இச்சுவடியில் உள்ளது. குருசேத்திரப் போரின் இறுதி நாள் யுத்தம். கௌரவர்களின் கடைசி தளபதி சல்லியனைக் கொன்றது, 99 கௌரவர்கள் கொல்லப்பட்டது, திரௌபதியின் சாபம் நிறைவேறியது, பாண்டவர்களின் சபதங்கள் நிறைவேறியது, பாண்டவர்களால் கொல்லாமல் விடப்பட்ட துரியோதனனி நிலை ஆகியன இதில் கூறப்பெற்றுள்ளன. Extent: 108. Size and dimensions of original material: 40.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Villiputturazhvar. Original institution reference: TU_TAMIL_0235_0379.