நல்லாப்பிள்ளை பாரதம் : விராட பருவம்

This work Nallappillai Bharatam is a vaisnavite epic. It was written by Nallappillai lived in eithteenth century on the basis of Viyasa Bharatam. This work is with14000 stanzas in 132 chapters. It also included the Villiputhur Azhvar bharatam. This manuscript consists of Virada parva only. நல்லாப்பிள்ளை பாரதம் தமிழ் வைணவக் காப்பியங்களுள் ஒன்று. இது தமிழ்நாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நல்லாப்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது. வியாச பாரதம் முழுவதையும் தமிழில் பாடிய நல்லாப்பிள்ளை மூலநூலில் உள்ளவாறே பதினெட்டுப் பருவங்களையும் 132 சருக்கங்களில் 14000 பாடல்களால் பாடியிருக்கிறார். வில்லிபாரதத்தில் உள்ள பாடல்களில் பெரும்பாலானவற்றை தனது நூலில் அப்படியே கையாண்டுள்ள இவர் வில்லிபுத்தூர் ஆழ்வார் பாடாமல் விட்ட கதைப்பகுதிகள் முழுதையும் பாடியுள்ளார். அத்தோடன்றி வில்லிபுத்தூர் ஆழ்வார் சுருக்கமாக பாடிய பகுதிகளையும் விவரித்துப் பாடியுள்ளார். எனவே நல்லாப்பிள்ளை பாரதத்தில் வில்லிபுத்தூர் ஆழ்வார் பாரதமும் அடக்கம் எனலாம். இச்சுவடியில் விராட பருவம் மட்டும் உள்ளது. Extent: 22. Size and dimensions of original material: 41cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Nallappillai. Original institution reference: TU_TAMIL_0231_0375.