This work is a commentry of Thirukovaiyar of Thiruvaathavuuradikal. It has 100 stanzas Praising Lord Ganesa, Lord Muruga and Lord Siva. This manuscript also has some songs collection of Kalladam. பாயிரமும் நூலும், 15 முதல் 66 அடிகள் வரையில் உள்ள 102 ஆசிரியப்பாக்களைக் கொண்ட மூவாயிரத்து நானூற்று எட்டு அடிகளில், அடங்கியுள்ளன. பாயிரத்துள், யானைமுகன் வணக்கம் ஒன்றும், முருகன் வணக்கம் ஒன்றுமாக இரண்டு பாக்களும், நூலுள், தனித் தனி ஒவ்வொன்றும் ஒவ்வொரு அகப்பொருள்-துறைக்குப் பொருந்திய 100 பாக்களும் இருக்கின்றன. திருவாதவூரடிகள் அருளிய திருக்கோவையாரின் நலத்தை உலகம் அறியச் செய்வதற்காக, அதிலிருந்து நூறு துறைகளைத் தேர்ந்து, ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வோர் ஆசிரியப்பா இயற்றி, தமிழறியும் பெருமானாகிய ஆலவாய் அண்ணலின் தெய்வத் திருமுன் இவ்வாசிரியர் ஓதியபோது, பாட்டுக்கு உருகும் பனிமலைவல்லி பங்கன், ஒவ்வொரு செய்யுள் முடியும்போதும், தன் திருமுடியைத் துளக்கி மகிழ்ந்தார் என்று ஒரு பழம் பேச்சு உண்டு. இச்சுவடி கல்லாடத்தின் சில பகுதிகளின் திரட்டாக செய்யுளும் உரைநடையுமாக அமைந்துள்ளது. Extent: 8. Size and dimensions of original material: 25.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Kalladar. Original institution reference: TU_TAMIL_2020_2593.
