This manuscript Sathiyarudam dealt with control of snack bites in 102 stanzas. It explains medicine preparation such as wax mixture, tablets, nasiyam, and thailams for curing poisons of different type of snake bites. பல்வேறு வகையாக விஷப்பாம்பு கடிகளுக்கும் கடிக்காமல் இருப்பதற்கும் மருந்துகளைச் சத்தியாரூடம் என்னும் இந்நூல் 102 பாடல்களின் வழி எடுத்துரைக்கிறது. கடியாமல் குளிசம், முடிமேல்குளிசம், நீர்க்குளிசம், அவிழ்தம் விஷமில்லை, கோரசர்மெழுகு, யெள்ளுமருந்து, காயசுத்தி, நட்சத்திரப்பலன், துவளை, கலிக்கம், ஒத்தடம், கெருடத்தியானம், ஆகிருஷ்ணம், மூலிகை அவிழ்தம், கிழங்குச்சரக்கு விவரம், பச்சைப்பாம்புப்பொடி, மெழுகு, சமையல்அவிழ்தல், நெஞ்சில் மார்பில் வயத்தில் அன்னத்தில் யேகமா நின்ற விஷத்துக்கு மருந்து, முதல வேதம் முதல் பத்தாம் வேகம் வரைமருந்து, எல்லா விஷத்துக்கும் நசியம், ராமதேவர் கலிக்கம், பேய்ப்பீர்க்கந் தயிலக் குழம்பு, வாசுகித் தியானம், அழிஞ்சில் தயிலம், பல்லுவிஷம் புண்ணுக்குச் சஞ்சீவி தயிலம், பதினாறு விரியனுக்கு மருந்து போன்ற பல்வேறு பாம்புக் கடிகளுக்கு மருந்துகளை இந்நூல் கூறுகிறது. Extent: 67. Size and dimensions of original material: 17.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1889_2420.
