Manuscript is a Sthala Puranam of Sivasailam near Thirunelveli District. It gives description of theTemple Goddess Paramakalyani and other deities. It also gives the stories of the kings and other sages, whom contributed the Temple. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிவசைலம் என்னும் தலத்தில் அருள்மிகு பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் ஆலயமும் ஒன்று. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இக்கோவில். இந்தக் கோவிலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் எழுந்து நிற்கும் நிலையில் உள்ள நந்திகேசுவர். இந்த நந்திகேசுவரர், இந்திர சபையின் தலைமை சிற்பி, மயனால் உருவாக்கப்பட்டதாகும். மேலும் இத்தலத்தில், கொலுவீற்றிருக்கும் பரமகல்யாணி அம்மன் நான்கு கைகளுடன் மேற்கு நோக்கி அமைந்திருப்பதும், நமனை நடுங்க வைத்து நமக்கெல்லாம் நல்அருள் பாலிக்கும் நாயகனை நாம் நான்கு திசைகளில் இருந்தும் தரிசிக்கக்கூடியதும் இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். இத்தல வரலாற்று திருநாட்டுச் சிறப்பு, திருநாகேசச் சிறப்பு, தீர்த்தச் சருக்கம், அத்ரிமர்முனி சருக்கம், இளமர் தவமுனிவர் சருக்கம், அத்ரிமாமுனிகணுக்கிரமானச் சருக்கம், பட்சிமுகமானச் சருக்கம், தேவி இடப்பாகம் பெற்ற சருக்கம், பாண்டியன் வேள்விச் சருக்கம், பாண்டியன் அனுக்கிரமானச் சருக்கம், ரகுநாயக்கர் பூசித்தச் சருக்கம், யாக பூசித்த சருக்கம் எனப் பல சருக்கங்களைக் கொண்டுள்ளது. Extent: 174. Size and dimensions of original material: 12.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0139_0237.
