This work describs the story of Saint Sundarar,who was robbed by thieves while returning on the way after meeting with the Cheraman Peruman near Thirumurugan Poondi. Sundarar reported the Incidence to the God of Thirumurugan Poondi. Lord Siva appeared and got back the robbed things. The work starts with leaf no 23. சேரநாட்டு யாத்திரை மேற்கொண்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள் அங்கு சில நாட்கள் தங்கியிருந்தபின் தனது தோழரான சேரமான் பெருமாள் அளித்த பெருஞ்செல்வத்துடன் திருவாரூருக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். அவர் திருமுருகன் பூண்டி எனும் தலத்திற்கு வரும் வேளையில் அவரிடம் திருவிளையாடல் புரியக் கருதிய சிவபெருமான் ஆறலைக் கள்வனாக வேட வடிவத்துடன் அவர் முன்பு தோன்றினார். பூத கணங்களும் அவருடைய வேட்டுவப் படைகளாகத் தோன்றின. சிவபெருமான் சுந்தரரை வழிமறித்து அவரிடமிருந்து பொருளைக் கொள்ளை கொண்டார். சுந்தரர் வருந்தி, திருமுருகன்பூண்டி முருகநாத சுவாமி ஆலயத்துள் சென்று ‘கொடுகுவெஞ்சிலை’ என்று தொடங்கி ஆறலைக்கும் கொடிய கள்வர்கள் வாழும் இந்த முருகன் பூண்டி நகரில் ‘எத்துக்கிருந்தீர் எம்பிரான் நீரே’ என்று மகுடமிட்ட, திருப்பாசுரத்தை அருளிச் செய்ய சிவபெருமான் உவந்து அவருக்கு முன்னே தோன்றி தாம் கவர்ந்த பொருட்களைத் திருப்பி அளித்தார். ஏட்டெண் 23இல் நூல் தொடங்குகிறது. Extent: 5. Size and dimensions of original material: 20.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Sundharar. Original institution reference: TU_TAMIL_0123-02_0208.
