This Manuscript Sethu Puranam written by Azhakiya Desikar in 16th century dealt with Sthalapuranam of Rameswaram and describes the bridge between India to Srilanka. This work consists 3438 stanzas in 45 chapters. Leaf nos. 78, 79, 80, 81 and 82 are missing. சேது புராணம் என்னும் நூல் நிரம்ப அழகிய தேசிகர் என்பவரால் 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. சேது என்பது இராமர் இலங்கைக்குச் செல்லக் கட்டியதாகச் சொல்லப்படும் பாலம். பாலம் கட்டப்பட்ட ஊர் இராமேசுவரம். எனவே சேது புராணம் இராமேசுரம் கோயில் பற்றிய புராணம். ஆசிரியர் இந்த நூலை ஒரு தலபுராணமாக மட்டும் செய்யாமல், ஒரு காப்பியம் போலவே படைத்துள்ளார். இந்த நூல் இராமநாத மாமுனிவர் என்பவரை வாழ்த்தி முடிகிறது. எனவே இந்த மாமுனிவரின் வேண்டுகோளின்படி இந்நூல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. 45 சருக்கங்களும், 3438 பாடல்களும் கொண்ட விரிவான நூல் இது. விநாயகர், சபாபதி நடராசர். சரசுவதி ஆகியோருடன் சிவஞானபோதம் சொன்ன மெய்கண்டாருக்கும் வணக்கம் கூறுவது அந்த நூலில் இவருக்கு இருந்த ஈடுபாட்டைப் புலப்படுத்துகிறது. சேதுவில் இராகவன் இராமநாதனை நிறுவிய கதையை இந்நூல் பாடுகிறது. 78-82ஆம் ஏடுகள் இல்லை. Extent: 199. Size and dimensions of original material: 13cm x 3.7cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Nirambha Azhagiya Desigar. Original institution reference: TU_TAMIL_0114_0186.
