பாகவதம் குழலூது படலம் மூலமும் உரையும்

The work Bhagavatam is the avatara history of Lord Krishna (Kannan). Bhagavata of Vyasa is a vaistanavite work in Sanskrit and it was translated to Tamil language. This manuscript has the chapter kulaloothum (Flute reciting) with commentary. கண்ணனின் வரலாற்றுக் கதையைச் சொல்லும் இலக்கியம் பாகவதம். இது வடமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு வைணவ சமய இலக்கியம் ஆகும். வடமொழிப் புராண பாகவதம் வியாசர் செய்தது. 36,000 பாடல்களைக் கொண்ட இது ஸ்ரீமத் பாகவதம் அல்லது மகாபாகவதம் என வழங்கப்படுகிறது. இதில் கீதைகளும் பத்து அவதாரக் கதைகளும் உள்ளன. பாகவதம் என்னும் பெயர்கொண்ட நூல்கள் தமிழில் இரண்டு உள்ளன. இவை வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல்கள். தமிழில் இதனை 16ஆம் நூற்றாண்டில் செவ்வைச் சூடுவார் அருளாள தாசர் என்னும் இரண்டு பெருமக்கள் பாகவதம் என்னும் பெயரால் இருவேறு நூல்கள் செய்துள்ளனர். திருமாலின் அவதாரங்கள் குறித்துப் பாடவேண்டும் என்னும் விருப்பத்தில் தோன்றியதே பாகவதம். இந்நூல் சலறக்காரச் சருக்கம், பரிச்சிற்றுச் சருக்கம், கற்ப்பயாகச் சருக்கம், சிறப்புப் பாயிரமுரைச் சருக்கம், வியாதனுற்பவ சருக்கம், பாரதவீரர் உற்ப்பவச் சருக்கம் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. இச்சுவடியில் குழலூது படலம் உரையுடன் காணப்படுகிறது. Extent: 51. Size and dimensions of original material: 34cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1329_1659.