மார்க்கண்ட புராணம்

This work is the story of Markandeya, descrbs the birth, activities, bakthi on Siva and escape from death with of grace of Lord Siva. It has 669 stanzas. மிருகண்டு முனிவர் மருத்துவவதியைத் திருமணம் செய்து, குழந்தைப் பாக்கியம் இல்லாமல் சிவபெருமானை மனமுருகித் தொழ அழகான ஆண்குழந்தையான மார்க்கண்டேயன் பிறந்தான். மார்க்கண்டேயன் நீண்ட காலம் வாழமாட்டான் என்றபோது, மார்க்கண்டேயன் தன்னுடைய 16ஆவது வயதில் சிவனிடம் பூரணமாகச் சரணாகதி அடைந்தான். எமன் உயிர்வாங்க பாசக் கயிற்றினை மார்க்கண்டேயன் மீது வீச உக்கிரமூர்தியாகச் சிவபெருமான் தோன்றி காலனை எட்டி உதைக்கின்றார். எமதர்மன் மூர்ச்சையாகி கீழே சாய்கின்றார். பூமாதேவியின் வேண்டுகோளுக்கிணங்க எமதர்மனை சிவபெருமான் மன்னித்து மூர்ச்சை தெளிய வைக்கின்றார். என்றும் பதினாறு வயதுடன் சீரஞ்சீவியாக மார்க்கண்டேயன் வாழ அம்பலத்தரசர் அருள்பாலிக்கின்றார் என்னும் புராணக் கதையானது பத்துச் சருக்கங்கள் 669 பாடல்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 98. Size and dimensions of original material: 42cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Kulanthaivelan. Original institution reference: TU_TAMIL_0852_1127.