ஞானவெட்டியான்

This work Gnanavettiyan of Thiruvalluvar dealt with the siddha philosophical thoughts. It explains the formation of womb, its growth, reason for defects, yoga practice for control the diseases and to attaine etaernal life. It has 1200 stanzas in the form of yappu metre. சித்தர்களின் கொள்கைகளை விளக்கும் நூல்களுள் ஞானவெட்டியானும் ஒன்று. ஞானவெட்டியான் என்பதற்கு அறிவு நெறியைக் காட்டுகின்றனவன் என்று பொருள். வெட்டியான் ஒருவன் உயர் வகுப்பினரை நோக்கிக் கூறுவது போல் இந்நூல் பாடப்பட்டுள்ளது. வெட்டியான் ஒருவன் அறிவுரை கூறுவதால் இந்நூலுக்கு ஞான வெட்டியான் என்று பெயர் வரப்பெற்றுள்ளது. இந்நூலைத் திருவள்ளுவர் பாடியதாகக் கூறுவர். வெண்பா யாப்பில் 1200 பாடல்களைக் கொண்டு பொழிப்புரையுடன் அமைந்துள்ளது. மக்கள் தாயின் வயிற்றில் கருக்கொள்வது, கருவிலே வளர்வது, கருவில் வளரும் குழந்தைகளுக்கு அங்கக் குறைகள் ஏற்படுவதன் காரணம், அங்கக் குறைகள் ஏற்படாமல் நல்ல குழந்தைகளைப் பெறும் வழி, குழந்தை பிறந்து வளரும் விதம், நோயணுகாமல் உடலைப் பேணிக் காண்கும் வழி, உடலை வலுப்படுத்தும் யோக நெறி, பிணிகளைத் தடுப்பதற்கான காய கல்பம், வாதமுறை போன்ற பல செய்திகள் இந்நூலில் கூறப்பெற்றுள்ளன. Extent: 115. Size and dimensions of original material: 32cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thiruvalluvar. Original institution reference: TU_TAMIL_0794_1019.